அதிருகிறது மட்டக்களப்பு: பிள்ளையானின் ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (24) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சுமார் 5 வருடங்களின் பின்னர் பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும்ஈ ஆதரவாளர்களும் வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here