உறவினருக்காக சட்டத்தை வளைத்தாரா அலி சப்ரி?: நாடாளுமன்றத்தில் சர்ச்சை!

தனது உறவினரை அடக்கம் செய்ய சட்டத்தை வளைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணமானதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது பி.சி.ஆர் பரிசோதனையில் வைரஸ் பாதித்திருப்பதை உறுதிப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார், ஆனால் உடலை எரிப்பதற்கு பதிலாக இரண்டாவது பி.சி.ஆர் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் நோயாளி வைரஸ் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டு, தகனம் செய்யப்படுவதற்கு மாறாக உடல் புதைக்கப்பட்டதாகவும் விதானகே கூறினார்.

அவரது உறவினர்கள் என்று வரும்போது நீதி அமைச்சர் சட்டத்தை வளைக்கிறார் என அவர் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அவர் சட்டத்தை வளைக்கவில்லை என்றும் தனிப்பட்ட லாபத்திற்காக ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டார் என்றும் வலியுறுத்தினார்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தால் அவர் தனது அமைச்சு பதவி மற்றும் நாடாளுமன்ற பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று அலி சப்ரி கூறினார்.

மற்றவர்கள் தகனம் செய்யப்படும்போது, கொரோனாவால் தான் இறந்தாலும், தனது உடல் அடக்கம் செய்யப்பட மாட்டாது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here