சுதா.கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய சூரரை போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது.
அமேசான் பிரைமில் வெளியான இப்படம் இதுவரை ரசிகர்கள் மத்தியில் மிகசிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
என்னதான் இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தாலும், சூர்யாவின் ரசிகர்களுக்கு இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்று வருத்தம் இருக்கிறது.
இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் அவரின் ரசிகர்களுக்காக கூடிய விரைவில் திரையிட சூர்யா முடிவு செய்துள்ளாராம்.