மூக்குத்தி அம்மன் படத்தொகுப்பாளர் 10 வருட காதலியை மணம்முடித்தார்

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,மூக்குத்தி அம்மன், பிஸ்கோத் உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களின் படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா தான் 10 வருடங்களாக காதலித்து வரும் தன் அன்பு காதலியை மணம்புரிந்துள்ளார்.

இவர் தற்போது தனுஸ் நடித்து வரும் கர்ணன்,சல்பேட்டா ஆகிய படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

இவர் சென்னையை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை கடந்த 10 வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வாழ்க்கையில் எதையாவது சாதித்து விட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோலுடன் உழைத்துள்ளனர்.

தற்போது முன்னணி படங்களின் தொகுப்பாளராக மாறியுள்ள ஆர்.கே.செல்வா இரு வீட்டார் சம்மதத்துடனும் அனிதாவை கரம் பிடித்துள்ளார்.

இவரது திருமணத்தில் வெங்கட் பிரபு, அதர்வா, பா.ரஞ்சித்,காளி வெங்கட், ஆர்.கே.பாலாஜி போன்ற நடிகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here