கனடாவில் அதிகரிக்கும் கொரோனா அலை: ஜஸ்டின் ட்ரூடோவின் அன்பு வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொற்று பரவலை வெற்றி கொள்வதற்கு உதவுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரைடோ காட்டேஜுக்கு வெளியே இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டின் தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.இனி வரும் காலம் குளிர் காலம் என்பதால் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

மருத்துவமனைகள் நிரம்பி மேலும் அன்பானவர்கள் இறந்து போவதைக் காணும் அபாயத்தில் இருக்கிறோம் . அதனை மனதில் கொண்டு, செயற்படுங்கள் அன்றாட வாழ்க்கையை முடக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 792பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 30ஆயிரத்து 503பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 54ஆயிரத்து 999பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 431பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 64ஆயிரத்து 049பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here