பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான குழப்பமும்-பிரக்‌சிட் வர்த்தக ஒப்பந்தமும்!

அமெரிக்காவின் பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு, பிரித்தானியா தனது ஒழுங்குமுறை ஒப்புதலை டிசம்பர் 1ஆம் திகதிக்குள் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியா உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டாளர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் முறையான மதிப்பீட்டைத் ஆரம்பிக்கவுள்ளதாக டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசாங்க மருத்துவமனைகள் அடுத்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துவிட்டால் இது சாத்தியமே என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 55ஆயிரத்து 24பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக பிரித்தானியா காணப்படுகிறது.

இதுவரை 15இலட்சத்து 12ஆயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 398பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 421பேரின் நிலை கவலைக்கிடமாக பிரித்தானிய செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறு பிரித்தானிய நாட்டில் கொவிட் நிலமை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் சர்ச்சைக்குரிய பிரக்சிட் பிரச்சினை.

பிரெக்சிற் நிலை­மாற்ற காலம் நிறைவுக்கு வரும் நிலையில் நேற்று முன் தினம் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் கனடாவும் கையெழுத்திட்டுள்ளன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புதிய இலட்சிய வர்த்தக ஒப்பந்தத்தை  தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பிரெக்சிற் மாற்ற காலம் டிசம்பர் 31 அன்று காலாவதியாகிறது. அதாவது கூட்டணி மற்றும் பிற நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் பிரித்தானியா இனி சேர்க்கப்படாது.

கனடாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளும் முன்பு இருந்த அதே விதிகளின் கீழ் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளப்படவுள்ள அதே நேரத்தில் பெஸ்போக் ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை நடத்தும் திறன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளில் மொத்த வர்த்தகத்தில் 1.5% கனடாவை சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here