அமெரிக்க கொரோனா தடுப்பூசியின் விலையிலும் பார்க்க எமது தடுப்பூசியின் விலை குறைவானதே -ரஷ்யா

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்(மாடர்னா-பைசர் )தாயாரித்திருக்கும் கொவிட்-19 தடுப்பூசியை விட தங்களுடைய தடுப்பூசி விலை குறைவாக இருக்கும் என ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா-பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 3 ஆம் கட்டி பரிசோதனையில் உள்ள நிலையில் அது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் குறித்த அமெரிக்க நிறுவனங்களின் தடுப்பூசியின் விலை 1,875 முதல் ரூ.2,775 ரூபாவாக இருக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஷ்ய நிறுவனம் தயாரித்திருக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என அந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஊறுதிப்படுத்தப்பட்ட விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here