இந்தியாவில் டிசம்பரில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில்  கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் எனஇந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

எனவே குறித்த பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராக உள்ளதா என;றும் நீதிமன்றம் தனது அறிக்கை ஊடாக கேட்டு உள்ளது.

டெல்லி, மராட்டியம், குஜராத், மற்றும் அசாம் மாநில அரசுகள் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் எடுத்த நடவடிக்கைகள் நிபந்தனை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

‘நடப்பு மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல் இருக்கலாம் என நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நாங்கள் கேட்டு கொள்கிறோம். கொரோனா பரவலுக்கு மாநிலங்கள் தயாராக இல்லை என்றால் டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் நடக்கக்கூடும்’ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஷ

மராட்டிய மாநிலம் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது.

குஜராத் சமீபத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிகரிப்பு கண்டுள்ளது. அகமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது. முதல்வர் விஜய் ரூபானி இன்று பள்ளிகளையும் கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. தொடர்ந்து கொரோனா எழுச்சியைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு போராடி வருகிறது, இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here