இலக்கியம் கற்பிக்க ஆண்கள் பொருத்தமில்லை: ஆண் அசிரியரின் நியமனத்தை ஏற்க மறுத்த கொழும்பு பிரபல பெண்கள் கல்லூரி!

கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் புதிதாக இடமாற்றம் பெற்று சென்ற ஆண் ஆசிரியர் ஒருவர், கற்பிக்க தகுதியற்றவர் என கூறி பாடசாலை அதிபர் அவரது நியமனத்தை நிராகரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அத்துடன், ஆசிரியரை பாடசாலைக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை.

க.பொ.த உயர்தரத்தில் சிங்கள மொழி மற்றும் இலக்கிய பாடத்துக்கான ஆசிரியருக்கே இந்த கதி நிகழ்ந்துள்ளது.

சிங்கள மொழி மற்றும் இலக்கிய பாடத்தை கற்பிக்க ஆண் ஆசிரியர் பொருத்தமானவர் அல்ல என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மிலகிரிய புனித போல் பெண்கள் பாடசாலையில் இருந்து வருடாந்த இடமாற்றமாக இந்த மாதம் 4 ஆம் திகதி ஆசிரியர், பாடசாலைக்கு வந்திருந்தார்.

அவர் தனது இடமாற்றக் கடிதத்தை அதிபரிடம் ஒரு வெற்றிலைடன் ஒப்படைத்த போது, சிங்கள மொழியையும் இலக்கியத்தையும் கற்பிக்க ஒரு ஆண் ஆசிரியர் பொருத்தமானவர் அல்ல என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சில் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலை வாயிலில் பாதுகாவலர்களை நிறுத்தி தன்னை பாடசாலைக்குள் நுழையவும் அதிபர் தடைவிதித்துள்ளதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர் பம்பலபிட்டி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

“இதுவரை இந்த பாடசாலையில் க.பொ.த உயர்தரம் சிங்களம், இலக்கிய பாடத்திற்கு எந்த ஆண் ஆசிரியரும் நியமனமாகவில்லை. அந்த விஷயத்தில் பெண் ஆசிரியைகளின் செயற்பாடு குறித்து பாராட்டுக்கள் உள்ளன. இந்த ஆசிரியரிடம் அப்படி கற்பிக்கும் ஆளுமை  இல்லை“ என்று பாடசாலை அதிபர் சந்தமலி அவிருபொல கூறியுள்ளார்.

இந்த ஆசிரியர் கல்வி அமைச்சின் இடமாற்ற செயல்முறை படி விசாகா வித்யாலயத்திற்கு வந்துள்ளார். அவரை பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமென கடந்த செப்ரரிலேயே கல்வி அமைச்சிடம் அதிபர் கோரியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here