அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து சிலோன் மீடியா போரம் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையுடன் இணைந்து மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களை கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தைமுன்னெடுத்தது.
மீனவர்களுக்கான கொவிட்-19 விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடற்கரை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர், இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனை இணைப்பாளர் எம்.வை.எம்.நிப்ராஸ், மாளிகைக்காடு மீனவர் சங்கத்தலைவர் எம்.ரீ.எம்.நெளசாத், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் யூ.எல் நூருல் ஹூதா, பிரதித்தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிட்ட போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு மாளிகைக்காடு மீனவர் சங்கத்தின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன் போது, கொவிட் 19 சுகாதார வழிமுறை பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர், துண்டுப்பிரசுரம், நோய் எதிர்ப்பு ஆயுர்வேத பானம் மற்றும் முகக்கவசம் என்பன மீனவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.