20,000 தொற்றாளர்களை கடந்த 99வது நாடாக பதிவாகியது இலங்கை!

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 20,000 ஐ கடந்தது. சீனாவின் வுஹானில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் என்ற தொகையை கடந்த 99வது நாடாக இலங்கை பதிவாகியது.

இன்று மேலும் 216 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரை மொத்தம் 391 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று 479 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,069 ஆக அதிகரித்துள்ளது.

12 வெளிநாட்டினர் உட்பட 6,010 நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் 56 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 456 பேர் கொரோனா சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here