20,000ஐ எட்டுகிறது இலங்கையின் கொரொனா தொற்று எண்ணிக்கை!

இதுவரை 175 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 19,946 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள்.

மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,427 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 479 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,069 ஆக அதிகரித்துள்ளது.

12 வெளிநாட்டினர் உட்பட 5,794 நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் 56 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 456 பேர் கொரொனா சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here