மட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்!

மட்டக்களப்பு மாவட்டச்செயலக காணிப்பிரிவு குகதா ஈஸ்வரன் உட்பட்ட அதிகாரிகள் நேற்று கொழும்பு இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

கடந்த சில வருடங்களில் முன்னாள் அரசாங்க அதிபரின் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க காணிகள் உட்பட தமிழ் மக்களின் காணிகள் முறையற்ற விதத்தில் விற்பனை மற்றும் கைமாறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், முடிக்குரிய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் வரலாற்று தாள்கள் மாற்றும் வரைபடங்கள் என்பன போலியான முறையில் மாற்றம் செய்து அழிக்கப்பட்டு பல கோடிருபாய்கள் இலஞ்சமாக பெறப்பட்டுள்ள பல ஆதாரங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவை தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் முன்னாள் அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்பனவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண மோசடி, அரசாங்க வாகனத்தினை முறையற்ற விதத்தில் பாவித்து செய்த மோசடி, சல்லித்தீவு சுற்றுலா மையம் அமைத்ததில் இடம்பெற்ற மோசடி, மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார கறவைப்பசு விநியோகத்தில் இடம் பெற்ற மோச, தயட்ட கிருள வேலைத்திட்டத்தில் மோசடியாக மேலதிக கொடுப்பனவு பெற்ற, ஒப்பந்த வேலைகளை வழங்கும் போது அரசாங்க கொள்கைகளை மீறி ஒரு சில ஒப்பந்த கார்களை வைத்து மேற்கொண்ட மோசடிகளை எதிர்காலத்தில் விசாரணைக்கும் உட்படுத்த உள்ளதாகவும் தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here