அபிவிருத்திக்கு அம்பாந்தோட்டை… சடலங்களை புதைக்க மன்னாரா?; இது என்ன சுடுகாடா?: சாள்ஸ் சீற்றம்

கொரோனா தொற்று உலகத்தில் பல நாடுகளில் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய மதத்தலைவர்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் என்று .

அதனை நான் வரவேற்கிறேன் . அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்று அதை செய்வதை நான் வரவேற்கின்றேன்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் என்னுடைய யோசனையை நான் கூறியிருக்கின்றேன்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கையில் கொரோனா தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய உடல்களை மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன், மன்னர் என்ன சுடுகாடா? கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றால் இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல் தான் இருக்கின்றது.

அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறை.

ஆனால் ஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வது என்பதனை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அது ஒரு நியாயமான செயலும் அல்ல. அபிவிருத்திகளை அம்பாந்தோட்டை- அவர்களுடைய மாவட்டங்களுக்கு செய்து கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்ய, மன்னார் மாவட்டம் என்ன சுடுகாடா என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here