ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் நாளை இறுதியாகுமாம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பான இறுதி முடிவு நாளை எட்டப்படும் என கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஊடகவியலாளரிடம் பேசிய விஜேவர்தன, கட்சி சீர்திருத்தங்கள் மற்றும் அடுத்தடுத்த மாற்றங்கள் ஜனவரி 2021 க்குள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

அடி மட்டத்திலிருந்து ஒரு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்க கட்சி திட்டமிட்டுள்ளது என்றார்.

கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய விரும்பவில்லை என்றும், இது குறித்து அவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

2020 பொதுத்தேர்தலில் 249,435 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை ஐ.தே.க பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here