பாடசாலை சேவையில் ஈடுபடும் வானங்களில் சுகாதார நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்த்த ஏனைய பகுதிகளில் நாளை (23) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன்போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லது வாகன சாரதிகளின் பொறுப்பு என பொலிசார் அறிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் முழுமையான சுகாதார விதிமுறைகள் பேணப்பட வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பொலிசாரால் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here