இந்திய மஞ்சள் ஏற்றுமதியாளர்களிற்கு 500 மில்லியன் நட்டம்!

இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுட்டதை தொடர்ந்து, இந்தியாவின் ஈரோடில் உள்ள வர்த்தகர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 500 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் அண்மையில் பல பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்தது. அதில் மஞ்சளும் உள்ளடங்குகிறது.

இதன் விளைவாக, இது ஆண்டுதோறும் சுமார் 7,500 தொன் மஞ்சளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய மஞ்சள் வர்த்தகர்களை மோசமாக பாதித்துள்ளது. ஈரோடில் வளர்க்கப்படும் மஞ்சள் அதன் உயர் தரத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். ஈரோடில் இருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படும்போது, ​​போக்குவரத்து செலவும் இலங்கைக்கு மிகவும் மலிவாக அமைகிறது. இதனால் ஈரோட்டு மஞ்சளை இலங்கை இறக்குமதியாளர்களும் விரும்பினர்.

இந்தியாவில், ஒரு கிலோ மஞ்சளை ரூ .70 க்கு பெறலாம்.

இலங்கையின் மஞ்சள் இறக்குமதி தடையின் பின்னர் ஒரு கிரோ மஞ்சள் 5,000 ரூபாவிற்கும் அதிகமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here