கண்டியின் சில பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து நடைமுறை!

மறைந்த நாபனே பேமசிறி தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று கண்டியில் நடைபெறுவதால், குண்டசாலை, வரபிட்டியில் உள்ள பண்டாரநாயக்க தேசிய பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.

தேரரின் இறுச்சடங்கு வரபிட்டி பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி, கண்டி-மஹியங்கன பிரதான வீதியின் போக்குவரத்து நாதரன்பொத்த 621 சந்திக்கு இடையில் தடைப்படும். குண்டசாலை மற்றும் திகன நகரங்கள் நண்பகல் முதல் தடை செய்யப்படும்.

இறுதி சடங்கு முடியும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

ஹசலக மற்றும் மஹியங்கனவிலிருந்து கண்டிக்குச் செல்லும் வாகன சாரதிகளும், கண்டியிலிருந்து அந்த பகுதிகளிற்கு செல்லும் வாகன சாரதிகளும் மாற்று வீதிகளை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here