தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகள் விடுவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பொலிஸ் பிரிவுகள் நாளை (23) அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் பொரளை, கோட்டை, வெல்லம்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் கடவத்த மற்றும் ஜா-எல பகுதிகளும் நாளை அதிகாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், கொம்பனி தெரு பொலிஸ் பகுதியின் வெகந்த கிராம சேவகர் பிரிவும், பொரளை பொலிஸ் பகுதியின் வனதமுல்ல கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பின் மட்டக்குளி, மோதரை, புளூமென்டல், கொட்டஹென, ஆட்டுப்பட்டி தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, கெசல்வத்த, கோட்டை, வெல்லவிடிய, கடலோர பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள போகாவத்த, பாமுனுமுல்ல, கிரிமாந்துடாவ, கோரவல, அட்டலுகம மற்றும் கலகஹமண்டிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here