மாவீரர் வாரத்தின் முதல் நாளில் சிவப்பு, மஞ்சள் கொடி கட்டி ‘கெத்து காட்டிய’ இளைஞன்: தமிழ் தெரியாததால் திரும்பி சென்ற பொலிசார்!

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (21) சிவப்பு மஞ்சள் கொடிகளை வர்த்தக நிலையம் ஒன்றின் முன் கட்டப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிசாருடன் வாக்குவாதப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மாவீரர் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக வவுனியா ஆலடி தோணிக்கல்லில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் செ.அரவிந்தனால் சிவப்பு மஞ்சள் கொடியினை பறக்கவிடப்பட்டிருந்தது.

வவுனியாவில் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்க கோரி வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் செ.அரவிந்தனின் பெயரையும் உள்ளடக்கியிருந்தனர். குறிப்பிடப்பட்ட இடங்களில் மாவீரர்தினத்தை அனுட்டிக்க முடியாது என அவருக்கும் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார், பறக்கவிடப்பட்ட கொடிகளினை அகற்றுமாறு தெரிவித்ததுடன் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என தெரிவித்து அரவிந்தனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவில், பொது வெளியில் எதுவும் செய்ய முடியாது, வீட்டிற்குள் இருந்து நினைவேந்தலைச் செய்யும் படியும் பொலிஸார் கோரியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு பிரதி ஒன்றைக் காட்டி இதில் எங்கு அவ்வாறு கூறப்பட்டுள்ளது என அரவிந்தன் பொலிஸாரிடம் கேட்டார்.

 

இதனையடுத்து குறித்த பிரதி தமிழில் இருந்ததால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி ஒன்றைக் கொண்டுவருகிறோம் என்று கூறிவிட்டு பொலிஸார் திரும்பிச் சென்றனர்.

இதன் பொது கருத்து தெரிவித்த செ.அரவிந்தன்-

கொடி கட்டியது தொடர்பாக பொலிஸார் வந்திருந்தனர். குறிப்பாக நீதிமன்ற கட்டளை சட்டத்திற்கு அமைவாகவே கொடிகளை காட்டியிருக்கிறேன். மேலும் மாவீரர் தின அனுஸ்டிப்பு அல்லது எங்களுடைய வீடுகளிலே வழிபடுவதற்கு உரிமை இருக்கின்றது என்பதை பொலிஸாருக்கு தெரிவித்திருந்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here