2 நாட்கள் ‘தண்ணி’ காட்டிய கொரோனா பெண் சிக்கினார்!

தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய பெண் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் எஹெலியகொடவில் கண்டுபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தனது இரண்டரை வயது மகனுடன் தப்பியோடிய பெண், 2 நாள் வேட்டைக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

கடந்த 19ஆம் திகதி இரவு தப்பியோடினார். எஹெலியகொடவில் உள்ள வீட்டுக்கு சென்ற அவர், அங்கு குழந்தையை விட்டுவிட்டு தலைமறைவானார்.

அவரை கண்டுபிடிக்க 3 பொலிஸ் குழுக்கள், புலனாய்வுதுறை களமிறக்கப்பட்ட நிலையில், அவர் பற்றிய தகவல் தெரிந்தால் வழங்குமாறு நேற்று பகிரங்க அறிவித்தல் பொலிசாரால் விடுக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்த பெண், போதைப்பொருளுடன் கைதான நிலையில் சிறைச்சாலையில் தொற்று உறுதியாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, குழந்தை எஹெலியகோடாவில் – பெண்ணின் உறவினர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here