20,000ஐ எட்டும் இலங்கையின் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 257 கொரோனா தொற்றாளர்கள் இன்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை 19,537 ஆக உயர்த்தது.

பெலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புள்ளவர்களே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,022 ஆக அதிகரித்துள்ளது.

12 வெளிநாட்டினர் உட்பட 5,873 பேர் தற்போது நாடு முழுவதும் 56 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மேலும் 319 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,590 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 480 பேர் வைத்தயசாலைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here