கொரோனா தொற்றாளருடன் பழகியதை மறைத்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென விழுந்து உயிரிழந்தார்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

பளை – புலோப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கடந்த 28ம் திகதி தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார். குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர் எனவும், குறித்த நபருடன் பேலியகொட மீன் சந்தைக்கு செல்லும் நண்பர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த தகவல்களை அவர் மறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்ய, உயிரியல் மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன. பிசிஆர் சோதனையின் பின்னரே அவரது இறப்பிற்கான காரணத்தை அறிய முடியும். அதுவரை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது.

வைத்தியசாலையின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் பரபரப்பான நிலைமை காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here