போத்தல்களில் அடைத்து கப்பலில் கடத்த முயன்ற கிளிகள் இந்தோனேசிய பொலிஸாரால் மீட்பு!

இந்தோனீசியாவின் பப்புவா கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்ட டசின் கணக்கான கிளிகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த கப்பலில் இருந்த பெரிய பெட்டியொன்றில் சத்தம் வந்ததை அடுத்து குறித்த பெட்டியை சோதனை செய்ததில் உயிருடன் 64 கிளிகளும் 10 இறந்த கிளிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலேயே அதிக அளவில் அழிந்துவரும் பறவை இனங்களுக்கு புகலிடமாக இந்தோனேசியா இருக்கிறது. ஆனால் அங்கு தான் சட்டவிரோத பறவை வர்த்தகமும் இடம்பெறுகிறது.

உள்ளூரில்  சந்தைகளிலும் பறவைகள் விற்க்கப்படும் அதேவேளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

துறைமுக நகரான ஃபக்பக்கில் கடந்த வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கிளிகள் எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘அசாதாரண சத்தம் கேட்டதையடுத்து பெட்டிக்குள் விலங்குகள் இருப்பதாக கப்பலில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதாக’ பொலிஜார் கூறியுள்ளனர்.

எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.மீட்கப்பட்ட பறவைகள் நியூ கினி மற்றும் தென் மேற்கு பசிபிக் பெருங்கடல் தீவுகளில் காணப்படும் ப்ளேக் கேப்புட் லோரீஸ்  வகை கிளிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பறவைகள் கடத்தல் இந்தோனீசியாவில் அதிகம் நடப்பதாகவும் ஆனால் குற்றவாளிகள் கைது தான் அவசியமான ஒன்றாக இருக்கிறது என்றும் வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகங்களை கண்காணிக்கும் அமைப்பின் தலைவர் எலிசபெத் ஜான் கூறுகிறார்.

இவ்வாறு பிளாஸ்டிக்போத்தலிகளில் பறவைகள் அடைத்து கடத்தப்படுவது புதிதல்ல என்ற போதிலும்,  2015ஆம் ஆண்டு அழியும் விளிம்பில் இருக்கும் எல்லோ கிரெஸ்ட்டேட் காக்கடூஸ்  என்ற 21 பறவைகளை போத்தல்களில் கடத்தியதற்காக இந்தோனீசிய பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2017ல் 125 வெளிநாட்டுப் பறவைகளை வடிகால் குழாய்களில் வைத்து கடத்தியதாக பலர் கைது செய்யப்பட்டனர் என்பதெல்லாம் நினைவு கூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here