ஒரு தடவை கொவிட்-19 வந்தால் மீண்டும் வருமா?

கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் 6 மாதம் வரையில் தொற்று ஏற்படுவற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளதென ஆய்வொன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராட்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் விசேட நிபுணர்கள் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதார துறையின் பேராசிரியர் டேவிட் அய்ரே, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய ஆய்வொன்னிறில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதாக கூறப்பட்டிருந்தது. எனினும் ஒஸ்போர்ட் வெளியிட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் மிக குறைவானவர்களுக்கே அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிற சாத்தியம் உள்ளது என கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here