வெளிநாடுகளில் சிக்கிய மேலும் 411 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கொவிட் 19 பரவலில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவித்து கொண்டிருப்பவர்களில் 411 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரிலிருந்து 290 பேரும் ஜக்கிய அரபு அமீரகத்திலிருந்து 21 பேரும் வீடு திரும்பியுள்ளனர்.

அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் வருகை தந்த அனைவரும் கட்டுநாயக்கா விமான நிலைய பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here