27ஆம் திகதி தமிழர்கள் யாரையும் நினைவுகூர முடியாது: பொலிசார் கிடுக்குப்பிடி!

முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 9 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் நினைவு நிகழ்வினை தடைசெய்யும் நோக்கில் மல்லாவி பொலிசார் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுஜன்சனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நினைவு நிகழ்வினை நடத்த வேண்டம் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி உயிரிழந்த மாணவர்களை நினைவுகூர முடியாது என்றும் பொலிசார் அச்சுறுத்தியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

படையினரின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களை புதைத்த இடத்தில் பெற்றோர்கள் நினைவுகூர்வதை தவிர்க்கமுடியாது என்று பிரதேச சபை உறுப்பினர் பொலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

வீதியில் வைத்து பிரதேச சபை உறுப்பினர் என்று கூட கருதாமல் சுமார் மூன்று மணி நேரம் பொலீசார் விசாரணை நடத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here