மரம் நட்டு மாவீரர்தினத்தை குழப்ப நினைக்கிறதா இராணுவம்?

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். இந் நிலையில் மீள் குடியேற்றத்தின் பின்னர் மாவீரர்களது உறவினர்கள், துயிலுமில்லக் காணியின் வெளிப் புறம் வீதி ஓரமாக தமது அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் இவ்வருடம் குறித்த துயிலுமில்லத்தின் வெளிப்புறப் பகுதியிலும் அஞ்சலிகளை மேற்கொள்ள முடியாதவாறு இராணுவத்தினர் அப்பகுதியில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மவீரர்களது உறவினர்கள் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், மக்கள் அஞ்சலியில் ஈடுபடுகின்ற துயிலுமில்லத்தின் வெளிப்பகுதியை துப்பரவுசெய்யும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததுடன், நேற்று குறித்த பகுதியில் மரங்கள் சில இராணுவத்தினால் நாட்டப்பட்டுள்ளன.

மேலும் துயிலுமில்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ‘தங்கபுரம் சந்தி’ பகுதியில் இருந்த இராணுவ வீதித்தடை கடந்த ஓரிரு நாட்களுக்குள் மக்கள் அஞ்சலியில் ஈடுபடும் இடம்வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் தமது அஞ்சலி நிகழ்வை தடுப்பதாகவே, இராணுவத்தின் குறித்த செயற்பாடுகள் அமைந்துள்ளதாக மாவீரர்களது பெற்றோரகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here