கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் பட்டியல்: முதலிடத்தில் சஜித்!

2020 ஒக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் மிகவும் செயற்திறன் மிக்க எம்.பி.யாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளில் பஙகேற்கும் நாட்கள், விவாதங்களில் பங்கேற்பது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறனை Manthri.lk தரப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் 2020 ஒக்டோபர் 06-23 வரையான காலப்பகுதி செயற்பாட்டின் அடிப்படையில் அதிக செயற்திறனான எம்.பியாக சஜித் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க, மூன்றாமிடத்தில் பொதுஜன பெரமுனவின் மஹிந்தானந்த அளுத்கமகே, நான்காம் இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வா, ஐந்தாம் இடத்தில் பொதுஜன பெரமுனவின் அலி சப்ரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here