முல்லைத்தீவு மாவட்டம் முழுவதிலும் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றில் இந்த தடை உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, மாங்குளம், மல்லாவி ஆகிய 5 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறித்த தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் எங்குமே மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அத்தோடு குறித்த ஐந்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழு தலைவர் உட்பட குழுவுக்குமாக 41 பேருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டிருக்கிறது.

இதற்கமைவாக முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 13 பேருக்கும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 11 பேருக்கும், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 4 பேருக்கும், மாங்குளம் பொலிஸ் பிரிவில் 6 பேருக்கும், மல்லாவி பொலிஸ் பிரிவில் 7 பேருக்குமாக 41 பேருக்கு இந்த தடை உத்தரவுகள் பெறப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here