முதல்முறையாக 3 ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில்!

பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்று ஜனாதிபதிகள் சபையில் ஆளும் கட்சியின் முன் வரிசையில் அமர்ந்திருந்த சம்பவம் நேற்று பதிவானது.

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் பங்கேற்க ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நேற்று (19) நாடாளுமன்றத்திற்கு வந்து, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகில் உட்கர்ந்திருந்தார்.

அவர்களுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஆசனத்திலிருந்து விவாதத்தில் பங்கேற்றார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாக பணியாற்றினார். மைத்ரிபால சிறிசேன 2015 முதல் 2019 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here