இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டிய நிலையில் இதுவரை 84.28 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அதே சமயம் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்துள்ளது.

மொத்த பாதிப்பு 90,04இ366 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 584 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக 40 ஆயிரத்திற்கும் கீழே இருந்த புதிய பாதிப்புகள், தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,28,410 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 44,807 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய நோய்த்தொற்றுகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறி, புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here