மாவீரர்தினத்தை தடைசெய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு 24ஆம் திகதி!

மாவீரர்தினத்தை தடை செய்யக்கோரி யாழ், கோப்பாய் பொலிஸ் நிலையங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோப்பாய், யாழ்ப்பாண பொலிசார் சார்பில் தத்தமது பொலிஸ் பிரிவுகளில் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று மாலை யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையுமடுத்து, வழக்கின் கட்டளையை எதிர்வரும் 24ஆம் திகதி வழங்குவதாக யாழ் நீதிமன்றம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here