கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

குளிப்பதற்காக சென்றவர் திரும்பி வரவில்லை என்று தேடியபோது கிணற்றில் விழுந்த நிலையில் காணப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here