மாவீரர்தினம்: சட்டப்போர்க்களமாகியது யாழ்ப்பாணம்; மேல் நீதிமன்றம், யாழ், மல்லாகம் நீதிமன்றங்களில் அடுத்தடுத்து வழக்கு!

மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்க கோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

யாழ் நீதிவான் நீதிமன்றத்தில், யாழ் பொலிசார் இன்று மாலை தாக்கல் செய்த வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது.

பிரதிவாதிகள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளனர்.

மாவீரர்தினத்தை தடை செய்யக்கூடாதென போரில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று யாழ் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதுதவிர, மாவீரர்தினத்தை தடைவிதிக்க கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மல்லாகம நீதிவான் நீதிமன்றங்களில் இன்று வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.

இதில் வழக்கு தொடர்ந்த தமிழ் மக்கள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here