அதிகார போட்டியால் சீரழியும் பூநகரி பிரதேசசபை: ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் பணியாளர்கள் வரும் திங்கள் (23) முதல்
தங்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை
பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் ஊழியர் நலன்புரி சங்கத்தினர் தெரிவிக்கையில்-

பூநகரி பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் செயலாளாருக்கிடையில் அதிகார
போட்டி ஏற்பட்டுள்ளது. செயலாளாரின் அதிகாரத்தை தான் மீள பெற்றுக்கொள்வதாக
கடந்தவாரம் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதன் பின்னர்
நிர்வாகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. சபையின் செயற்பாடுகள்
முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடுப்பனவுகளுக்கான காசோலைகளில்
கையொப்பம் இடுவது, பணியாளர்களின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில்
வழிப்படுத்துவது, உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடமைகளை சீராக
மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக பணியாளர்களால் தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

எனவேதான் நாம் இந்த அதிகார இழுபறி நிலைமைகளில் பணியாளர்களை மீட்டு
சபையின் நாளாந்த கடமைகளை சீராக மேற்கொள்ள உயரதிகாரிகள் தலையிட்டு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வரும்
திங்கள் முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்படவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளையுடன்
தொடர்பு கொண்டு வினவிய போது- தவிசாளர் என்ற வகையில் என்னால் பணியாளர்களை கொண்டு எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது. அனைத்து பணியாளர்களையும் செயலாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் அவரது அதிகாரங்களை நான் மீள பெற்றுள்ளேன். இதன் காரணமாக பணியாளர்கள் மத்தியில் தவிசாளரா அல்லது செயலாளரா யார் சொல்வதனை தாங்கள் கேட்டு பணியாற்று என்ற குழப்பகரமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வட  மாகாண உள்ளுரைாட்சி ஆணையாளர் தொலைபேசி ஊடாக அழைத்துள்ளார் பேசிவதற்கு எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here