மாவீரர் தினத்திற்கு அனுமதி கோரும் மனு தள்ளுபடி!

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடைவிதிக்க கூடாதென கட்டளையிட கோரி தாக்கல் செய்த மனுக்களை யாழ் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தள்ளுபடி செய்தார்.

மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் சார்பில் வி.மணிவண்ணனும், வேறு 8 பேர் சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், மேலும் பல தமிழ் சட்டத்தரணிகளும் இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மார்தன், பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தரம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டதரணி சஹிரா பாரிக் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவர்கள் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கமைய இது போன்ற தீர்ப்புகளை வழங்குவதால் நீதிமன்றத்தின் அதிகாரம் தொடர்பில் சிக்கல் நிலைமைத் தோற்றம் பெரும் என்று மன்றில் அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here