ஜேர்மனியில் கத்திக்குத்து-5பேர் படுகாயம்!

ஜேர்மனியின் ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் இளம் ஆண்  ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் குத்திய சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கத்தி குத்து சம்பவத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

5பேரை கத்தியால் குத்திய குறித்த நபர் அங்கிருந்த மற்றவர்களையும் தாக்க முற்பட்டபோது பலர் குறித்த இனந்தெரியாத தாக்குதல்தாரி மீது பதில் தாக்குதல் நடத்தியதால் ஏனையவர்கள் தப்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சம்பவம் அறிந்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் தாரியை மடக்கி பிடித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதென கூறப்படுகிறது.

தாக்குதல்தாரிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். குறித்த இளம் வாலிபர் மன உளைச்சல் காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுனகிறது. எனினும் இது தொடர்பில் பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here