2020 உலகளவில் இலஞ்சம் அதிகம் வாங்கிய நாடுகளின் பட்டியல்-இலங்கை எந்த இடத்தில்?

உலக அளவில் லஞ்சம் அதிகமாக வாங்கும் நாடுகளின் பட்டியலை உலக லஞ்ச ஒழிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு (TRACE) அரச தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில், உலகளவில் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பீடு செய்து பட்டியலிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 2020, இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் இலங்கை 47 புள்ளிகளுடன் 87 ஆவது இடத்தில் உள்ளது. அயல் நாடான இந்தியா 45 புள்ளிகளுடன் 77ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஊழல் மோசடி குறைவாகவே உள்ளது.

இந்த ஆண்டு தரவுகளின்படி வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான்,வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டென்மார்க், நோர்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் லஞ்சம் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா 54 புள்ளிகளுடன் 126 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 23 புள்ளிகளுடன் 20 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் பகைநாடும் இலங்கையின் நட்பு நாடுமாக காணப்படுகின்ற சீனா அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஊழல் மோசடி கூடிய நாடாக இருக்கின்ற போதும். இலங்கை இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஊழல் குறைந்த நாடாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் சீனா தனது அதிகாரத்தை தொடர்ந்து ஒழுங்குபடுத்துவதின் மூலம் அரசு அதிகாரிகளின் லஞ்ச வாய்ப்புகள் குறைத்துள்ளதாக டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here