வருகிறது புதிய நடைமுறை: QR குறியீட்டைப் பெற்றே அரச அலுவலகங்களிற்குள் நுழையலாம்!

கொரோனா அபாய சூழலில் தடமறிதலை இலகுபடுத்த அரசு அறிமுகப்படுத்திய “பாதுகாப்பாக இருங்கள்” (Stay Safe) டிஜிட்டல் திட்டத்தை அனைத்து அரச நிறுவனங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களிற்கும் அறிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அரசு நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவுசெய்து தங்கள் நிறுவனத்திற்கு தனித்துவமான QR குறியீட்டைப் பெற வேண்டும்.

QR குறியீட்டுடனான சுவரொட்டி அச்சிடப்பட்டு அனைத்து அரச நிறுவனங்களின் நுழைவாயில்களிலும் தெளிவாகக் காண்பிக்கப்பட வேண்டும். அந்தந்த நிறுவனங்களுக்கு வரும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் QR குறியீட்டை ஸ்கான் செய்து அவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் போன்களை வைத்திருக்காத அல்லது பயன்படுத்தாத நபர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய கூட்டாளர்களையும், அவர்களின் நடமாட்டங்களையும் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சவால்களுக்கான தீர்வாக “பாதுகாப்பாக இருங்கள்” திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here