பாடசாலைகள் மீள திறக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக ஆரம்பிப்பதென அரசாங்கம் எடுத்த முடிவுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பொறுப்பற்ற முடிவு என்று அந்த சந்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீள திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சுகாதார செயற்பாடு அரசாங்கத்தால் தெளிவுபடுத்தப்படவில்லை.

கொரோனா முதல் அலையின் போது, ​​பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்வதாகவும், கை கழுவுவதற்கான வசதிகளை வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்ததாகவும், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டவுடன் பல பாடசாலைகளிற்கு இந்த வசதிகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது கொரோனா பரவல் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இப்போது பாடசாலைகளை திறப்பதெனில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், மாணவர்களின் போக்குவரத்து முறைகள் மற்றும் பிற அம்சங்களில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here