கொரோனா தடுப்பூசியின் விலை 1000 ரூபாவா? – எப்போது மருந்து கிடைக்கும்!

ஒக்‌ஸ்போர்ட் தடுப்பூசி குறித்து பல முக்கிய தகவல்களை சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இறுதி பரிசோதனை முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பொறுத்து 2021பெப்ரவரியில் சுகாதார பணியாளர்கள் முதியவர்களுக்கு ஒக்‌ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கலாம் என சீரம் நம்பிக்கையுடன் கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன்  பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி கிடைக்கலாம் எனவும் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சமாக ரூ 1000 என்ற விலையில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர் ‘தடுப்பூசி உற்பத்தி தற்போது வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் அது கிடைக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் திட்டப்படி நடந்தால் எதிர்வரும் 2021 பெப்ரவரியில் தடுப்பூசி கிடைத்துவிடும்.

தொடர்ந்து மார்ச்- ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை முதியவர்கள், கர்ப்பிணிகள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்க  வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.

இங்கிலாந்து அதிகாரிகளும் ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனமும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குழந்தைகள்  இன்னும் சிறிது காலம் கொரோனா மருந்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு தடுப்பூசி அறிமுகமாகி குறைந்தது 4 மாதங்கள் கழித்தே  கிடைக்கும்’ எனத் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here