27 வயதான யுவதி உள்ளிட்ட 4 பேர் நேற்று கொரோனாவால் மரணம்!

நாட்டில் நேற்று (19) மேலும் 4 கொரோனா உயரிழப்புக்கள் பதிவாகின. இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 27 வயதான யுவதியொருவரும் உள்ளடங்குகின்றார்.

70, 86 வயதுடைய இரண்டு ஆண்களும், 27, 59 வயதுடைய இரண்டு பெண்களுமே உயரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விவரங்கள் வருமாறு,

01. கொழும்பு 10 இல் வசிக்கும் 70 வயது ஆண். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைரஸால் பாதிக்கப்பட்டார். உயிரிழப்புக்கான காரணம் கோவிட் -19 தொடர்பான நிமோனியா என அடையாளம் காணப்பட்டது.

02. கொழும்பு 15 ஐச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் முல்லேரியா ஆதார மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவிட் -19 தொற்றினால் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

03. களுத்துறை பொகுனுவிட்டவில் வசிக்கும் 59 வயது பெண், அவரது வீட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்றால் அதிகரித்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தார்.

04. களுத்துறை ஹலோட்டவைச் சேர்ந்த 86 வயது ஆண் ஒருவர் தனது இல்லத்தில் காலமானார். கோவிட் -19 காரணமான மார்பு தொற்றினால் உயிரிழந்தார் என அடையாளம் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here