பதுளையின் இரண்டு பிரதேசசெயலக பிரிவுகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை!

கன மழை காரணமாக இன்று (19) மாலை பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் எல்ல பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த எச்சரிக்கையில், கனமழை பெய்தால் மண்சரிவு, பாறை உருண்டு வீழ்தல் போன்ற அபாயங்கள் ஏற்படலாமென்பதால், மக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here