கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளின் கூரைகளின் மீது ஏறி கைதிகள் நடத்தி வந்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அபாயத்தால் தாம் சிறைகளில் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கோரியும் இரண்டு சிறைச்சாலைகளையும் சேர்ந்த சுமார் 20 கைதிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சிறைச்சாலை சீர்திருத்த கைதிகள் மறுவாழ்வு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கைதிகளின் குறைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here