ஹப்புத்தளை மண்சரிவினால் 70பேர் இடப்பெயர்வு!

இன்று (19) மாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹப்புத்தளை, கல்கந்த தோட்டத்திற்கு அருகே ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 16 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபயக்கோன் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் ஹப்புத்தளை தம்பேதென்ன எண் 3 தமிழ் மகா வித்யாலயாவில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டதாக பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்தது.

தங்க வைக்கப்பட்டவர்களிற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here