கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது:ஆய்வாளர்கள் நம்பிக்கை

ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது.

இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியமான 560  தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் கொரோனா வைரஸை தடுப்பூசி நிறுத்துமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கின்றனர். இந்த முக்கியமான கட்டத்தின் ஆரம்ப முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளை பிரதிபலித்துள்ளன.

கொவிட் தடுப்பூசியை வளர்ப்பதில் உள்ள சவால், ஒருவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் வைரஸுக்கு எதிராக போராட உடலைத் தூண்டுவதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here