அம்பலமாகிய அவுஸ்திரேலிய படைகளின் கொலைகள்: 19 இராணுவத்தினரை சட்டத்தின் முன்நிறுத்த அரசு ஒப்புதல்!

அவுஸ்திரேலிய படைகளின் அத்துமீறிய  செயற்பாடுகள் ஆப்கானிஸ்தானில் அப்பாவி  பொது மக்கள் 39 பேரின் கொலைக்கு காரணமாக இருந்துள்ளது என கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்  அவுஸ்திரேலிய முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் 19 பேர் குற்றவியல் வழக்குகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்தத்தில் பங்கெடுத்த அவுஸ்திரேலிய சிறப்புபடையினர்  அங்கே அப்பாவி மக்கள் 39 பேரை கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கைதிகள் மற்றும் விவசாயிகள் என தெரியவந்திருக்கிறது. 

ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதா என புலனாய்வு துறை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர்  லிண்டா ரெனால்ட்ஸ் கடந்த வாரம் கான்பெராவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், குறித்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக கூறியிருந்தார்.

2003 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்கள் பற்றிய வதந்திகளை விசாரிக்க 2016 ஆம் ஆண்டில்  நீதிபதி போல் ப்ரெட்டன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு நான்கு ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் 20,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 25,000 படங்களை ஆராய்ந்தது, 423 சாட்சிகளை சத்தியப்பிரமாணத்தின் கீழ் கருத்துகூற வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் பிரகாரம் அவுஸ்திரிரேலிய படைகளின் அத்துமீறிய கொலை சம்பவங்கள் மேலும் அம்பலமாகின.

ஆனால் அவுஸ்திரேலியாவோ அதை மூடி மறைக்க பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்துவந்தது. எனினும் அந்நாட்டு ஊடகம் ஒன்றின் விடாமுயற்சியினால் புலானாய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்து. குறித்த ஊடகத்தின் அறிக்கைகள் அவுஸ்திரலிய படைகள் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்களை கொலை செய்த சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன.

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக சம்பவத்தை மறைக்க முடியாத இக்கட்டான நிலமையை தொடர்ந்து அவுஸ்திரேலியா, குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ வீரர்கள் மீது விசாரணை நடவடிக்கை எடுக்க ஓப்பு கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here