கச்சதீவு கடற்பரப்பிற்குள் எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

எல்லை மீறி கச்சதீவு கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடல்படையினரால் விரட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 500 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 50 பேர் 6 பெரிய ரோந்து படகுகளில் மீனவர்களை நோக்கி வரைந்துள்ளனர்.

அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்க கூடாது. இது எங்கள் எல்லைப்பகுதி. இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்துள்ளனர்.

மீனவர்கள் மீள செல்லாத நிலையில்  மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு புறப்பட தயாராகியதாகவும் அப்போது  இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரூ 20,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here