நந்திக்கடலை அசுத்தப்படுத்தாதீர்கள்-மக்கள் கவலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியை அண்டிய இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் களப்பில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மீன் பிடித்து வருகின்றனர்.

ஆனால் சில காலங்களுக்கு முன்னர் குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இயற்கை ஒத்துக்கிடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

குறித்த களப்பு பகுதியில் வீதியின் ஓரத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வீச்சுவலை தொழிலைச் செய்கின்ற மீனவர்களின் வலையில் குப்பைகள் படுவதால் அவர்களது நேரங்கள் வீணடிக்கப்படுவதாகவும், குறித்த சூழல் மிகவும் பாதிப்பதாகவும் பல்வேறு பறவைகளின் வருகை காணப்படுகின்ற குறித்த பிரதேசங்களில் குப்பைகளை கொட்டுவதால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த களப்பை நம்பி மீன்பிடி தொழிலை நம்பி வாழ்வை கொண்டு செல்கின்ற மீனவர்களுக்கும் இதனுடாக பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடை செய்து குறித்த களப்பு பகுதியில் இருக்கின்ற குப்பைகளை அகற்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு குறித்த இயற்கை ஒத்துக்கிடத்துக்கு வருடத்திற்கு வருகின்ற பறவைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here